தமிழகத்தில் முதல் கட்டமாக 100 பேட்டரி பஸ் இயக்க முடிவு: அமைச்சர் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகத்தில் முதல் கட்டமாக 100 பேட்டரி பஸ் இயக்க முடிவு: அமைச்சர் தகவல்

கரூர்: தமிழகத்தில் பேட்டரியில் இயங்கக்கூடிய பஸ்கள் இயக்குவது தொடர்பான ஆய்வுக்காக போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் லண்டன் சென்றிருந்தார். சில நாட்களுக்கு முன் அவர் கரூர் திரும்பினார்.

இந்நிலையில் இன்று காலை கரூரில் உள்ள குமரன் உயர்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் பேட்டரி பஸ்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை வழித்தடத்தில் சி 40 என்ற அமைப்பு வழித்தடங்களை ஆய்வு செய்து வருகிறது. ஆய்வுக்கு பிறகு முதல்கட்டமாக சென்னையில் 80, கோவையில் 20 பேட்டரி பஸ்கள் இயக்கப்படும்.

 ஒரு பேட்டரி பஸ்சின் விலை ரூ. 2 கோடி.

இதுதவிர புதிதாக 500 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து கழகத்துக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கூடுதல் நிதி ஒதுக்கும்படி தமிழக முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளோம். கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.

.

மூலக்கதை