ஜப்பான் மக்கள் தொகையில் 28 % பேர் வயதானவர்கள் : அரசு தகவல்

தினகரன்  தினகரன்
ஜப்பான் மக்கள் தொகையில் 28 % பேர் வயதானவர்கள் : அரசு தகவல்

டோக்கியோ : ஜப்பான் மக்கள் தொகையில் 5-ல் ஒரு பங்கினர் 70 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள் என்று அந்நாட்டு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மக்கள் தொகையில் 28.1 % பேர் 65 வயதை கடந்தவர்கள். உலகளவில் இந்த விகிதம் ஜப்பானில் தான் அதிகம். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் முதியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் அதிகரித்து இருப்பதால் கொள்கை அளவிலான முடிவுகளை எடுக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது.

மூலக்கதை