ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் விடுதலை ஆவாரா?

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் பணத்தில், பிரிட்டன் தலைநகர், லண்டனில், நான்கு சொகுசு வீடுகள் வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட்டதால் நவாஸ் ஷெரீப்புக்கு, 10 ஆண்டுகளும், மகள் மரியமுக்கு, 7 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மருமகன் முகமது ஷப்தாருக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில், இந்த 3 பேரின் சிறை தண்டனையை இஸ்லாமாபாத் ஐகோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. இதனையடுத்து, 3 பேரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில்  நவாஸ் ஷெரீப்பின் மனைவி குலுஷம் மரணமடைந்ததை தொடர்ந்து, அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க 3 பேருக்கும் தற்காலிக பரோல் வழங்கப்பட்ட நிலையில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் பணத்தில், பிரிட்டன் தலைநகர், லண்டனில், நான்கு சொகுசு வீடுகள் வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட்டதால் நவாஸ் ஷெரீப்புக்கு, 10 ஆண்டுகளும், மகள் மரியமுக்கு, 7 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மருமகன் முகமது ஷப்தாருக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த 3 பேரின் சிறை தண்டனையை இஸ்லாமாபாத் ஐகோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. இதனையடுத்து, 3 பேரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில்  நவாஸ் ஷெரீப்பின் மனைவி குலுஷம் மரணமடைந்ததை தொடர்ந்து, அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க 3 பேருக்கும் தற்காலிக பரோல் வழங்கப்பட்ட நிலையில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

 

மூலக்கதை