கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் விசாரணை ஜலந்தர் பிஷப்பை கைது செய்ய போலீசார் முடிவு?

தமிழ் முரசு  தமிழ் முரசு
கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் விசாரணை ஜலந்தர் பிஷப்பை கைது செய்ய போலீசார் முடிவு?

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் குரவிலங்காட்டை சேர்ந்த கன்னியாஸ்திரி அளித்த பலாத்கார புகாரில் சிக்கிய ஜலந்தர் பிஷப் பிராங்கோ நேற்று போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரானார். அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை ஏற்கனவே போலீசார் பட்டியலிட்டு வைத்து இருந்தனர்.

சுமார் 850க்கும் மேற்பட்ட கேள்விகளை தயார் செய்து ைவத்திருந்தனர். பிஷப் பிராங்கோவிடம் கொச்சி திருப்பூணித்துறாவில் உள்ள குற்றப்பிரிவு எஸ்பி அலுவலகத்தில் வைத்து கோட்டயம் எஸ்பி ஹரிசங்கர் மற்றும் வைக்கம் டிஎஸ்பி சுபாஷ் தலைமையில் விசாரணை நடத்தினர்.

நேற்று காலை சுமார் 11 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 6 மணிவரை நடந்தது. முதற்கட்ட விசாரணையின் போது 104 கேள்விகள் ேகட்கப்பட்டன.



போலீசாரின் கிடுக்கிபிடி விசாரணையால் பதிலளிக்க முடியாமல் பிஷப் திணறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் விசாரணை குறித்த  தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.   ‘‘கன்னியாஸ்திரிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்தேன்.

ஆகவே என்னை பழிவாங்குவதற்காக போலீசில்  அவர் பொய்யான புகார் அளித்துள்ளார்’’ என பிஷப் கூறினார். ஏற்கனவே தனிப்படை போலீசார் ஜலந்தர் சென்று விசாரித்தபோதும் பிஷப் இதையே கூறியிருந்தார்.

கன்னியாஸ்திரி அளித்திருந்த புகாரில், 2014 மே 5ம் தேதி இரவு 10. 45 மணியளவில் குரவிலங்காட்டில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் மிஷன் இல்லத்தில் வைத்து பிஷப் தன்னை பலாத்காரம் செய்ததாக தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக 2 பேர் சாட்சியமும் அளித்திருந்தனர்.



ஜலந்தரில் வைத்து நடந்த விசாரணையின்போது போலீசார் இதுகுறித்து கேட்டனர். அப்போது கன்னியாஸ்திரி புகாரில் தெரிவித்துள்ள நாளில், தான்  குரவிலங்காடு மடத்துக்கு செல்லவில்லை என பிஷப் கூறியிருந்தார்.

நேற்று இதுகுறித்த கேள்வியை போலீசார் எழுப்பினர். அப்போது அன்று மடத்துக்கு தான்  வந்தாலும் உடனடியாக திரும்பிவிட்டதாகவும், அன்று இரவு மடத்தில் தங்கவில்லை என்றும் கூறினார்.

ஆனால் அன்று இரவு மடத்தில் தங்கினார் என்று சாட்சி அளித்த 2 பேரில் ஒருவர் பிஷப்பின் டிரைவர் என்று போலீசார் கூறியதும், அவர் எந்த பதிலும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்தார். இதேபோல் போலீசாரின் பல கிடுக்கிப்பிடியான கேள்விகளை எழுப்பினார்.

அந்த கேள்விகளுக்கு பிஷப் பதிலளிக்காமல் மவுனம் சாதித்தார். இதன்மூலம் பிஷப் பொய் சொல்வதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் இன்று மீண்டும் 2வது நாளாக விசாரணைக்கு ஆஜராக பிஷப்பிடம் போலீசார் கூறியுள்ளனர்.

இன்றைய விசாரணையின் போதும் பிஷப்பின் பதில்  திருப்தி அளிக்கவில்லை என்றால் போலீசார் அவரை கைது செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. நேற்று நடந்த விசாரணையின்போது, புகார் செய்த  கன்னியாஸ்திரியுடன் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியின் வீடியோ, பலமுறை இருவரும் தொலைபேசியில் பேசிய பதிவுகளையும் பிஷப் போலீசில் அளித்துள்ளார்.

விசாரணை முடிந்து பிஷப் வெளியே செல்லும்போது குவிந்திருந்த இந்திய கம்யூ. தொண்டர்கள் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு  ஏற்பட்டது.

விசாரணை குறித்து கோட்டயம் எஸ்பி ஹரி சங்கர் கூறுகையில், ‘‘விசாரணைக்கு பிஷப் பிராங்ேகா முழு ஒத்துழைப்பு அளித்தார். பிஷப்பிடம் இன்றும் விசாரணை தொடர்ந்து நடக்கிறது.

பிஷப்பை ைகது செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

விசாரணை முடிந்த பின்னர்தான் முடிவு செய்யப்படும்’’ என்றார்.

.

மூலக்கதை