மியான்மரில் ஆங் சான் சூச்சி குறித்து பேஸ்புக்கில் அவதூறு கருத்து பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு 7 ஆண்டு சிறை

தினகரன்  தினகரன்
மியான்மரில் ஆங் சான் சூச்சி குறித்து பேஸ்புக்கில் அவதூறு கருத்து பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு 7 ஆண்டு சிறை

பர்மா: மியான்மர் நாட்டின் தலைவர் ஆங் சான் சூச்சி குறித்து பேஸ்புக்கில் தவறாக கருத்து பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு அந்நாட்டு  நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரின் நகர் மின் ஸ்வா என்ற பத்திரிக்கையாளர் பேஸ்புக்கில் அந்நாட்டின் தலைவர்  ஆங் சான் சூச்சு குறித்து தவறான பதிவை பதிவிட்டுருந்ததன் காரணமாக யாங்கூன் மேற்கு நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.மக்கள் மத்தியில் சூச்சி குறித்து தவறான எண்ணத்தை பரப்பும் நோக்கில் அவரது பதிவுகள் இருந்ததன் காரணமாக அவருக்கு இந்தத்  தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதான அந்நாட்டு ராணுவத்தினரின் வன்முறைத் தாக்குதல்களை வெளியுலகுக்கு கொண்டு வந்த இரண்டு பத்திரிகையாளர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கியது.இந்த விவகாரத்தில் சூச்சி தொடர்ந்து மவுனம் காத்து வந்தததால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவருக்கு எதிரான போராட்டங்களும் நடைபெற்றன. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மியன்மரின் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மூலக்கதை