இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது

தினகரன்  தினகரன்
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கும் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 8 பேருக்கு துரோணாச்சார்யா விருதும், 20 பேருக்கு அர்ஜூனா விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டுக்கான விருதுக்கு அனைத்து விளையாட்டு பிரிவுகள் சார்பில் வீரர், வீராங்கனைகள் பரிந்துரைக்கப்பட்டனர். இவர்களில் விருது பெறுவோரை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தேர்வு தேர்வு செய்தார்.இதே போல அர்ஜூனா விருது 20 வீரர், வீராங்கனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வீரர், வீராங்கனைகள்: நீரஜ் சோப்ரா (வில்வித்தை), ஜின்சன் ஜான்சன் (தடகளம்), ஹிமா தாஸ் (தடகளம்), சிக்கி ரெட்டி (பேட்மின்டன்), சதிஷ் குமார் யாதவ் (குத்துச்சண்டை), ஸ்மிரிதி மந்தனா (கிரிக்கெட்), சுபன்கர் ஷர்மா (கோல்ப்), மன்பிரீத் சிங் (ஹாக்கி), சவிதா புனியா (ஹாக்கி), ரவி ரத்தோர் (போலோ), ரஹி சர்னோபட் (துப்பாக்கி சுடுதல்), அங்குர் மிட்டல் (துப்பாக்கி சுடுதல்), ஷிரேயாசி சிங் (துப்பாக்கி சுடுதல்), மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்), ரோகன் போபண்ணா (டென்னிஸ்), ஸ்மித் (மல்யுத்தம்), பூஜா காடியன் (வுஷூ), அங்குர் தமா (பாரா தடகளம்), மனோஜ் சர்கார் (பாரா பேட்மின்டன்). விருது வழங்கும் விழா வரும் 25ம் தேதி டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடக்க உள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளார்.

மூலக்கதை