பசுவுக்கு பாரத மாதா அந்தஸ்து வழங்குக் கோரும் தீர்மானம் - உத்தரகாண்ட் மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றம்

தினகரன்  தினகரன்
பசுவுக்கு பாரத மாதா அந்தஸ்து வழங்குக் கோரும் தீர்மானம்  உத்தரகாண்ட் மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றம்

உத்தரகாண்ட்: பசுவுக்கு பாரத மாதா அந்தஸ்து வழங்குக் கோரும் தீர்மானம், உத்தரகாண்ட் மாநில சட்டப் பேரவையில் நிறைவேறியது. அம்மாநில கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சரான ரேகா ஆர்யா இந்த தீர்மானத்தை கொண்டு வந்து பேசுகையில் ஆக்சிஜனை உள்ளிழுத்து அதே வாயுவை வெளியேற்றும் ஒரே விலங்கு பசு தான் என்று கூறினார்.பசு சிறுநீர் மருத்துவ குணம் கொண்டது என்று பேசிய ரேகா ஆர்யா பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலுக்குப் பின் சிறந்ததாக அறிவியல் பூர்வமாக கருதப்படுவது பசுவின் பால் தான் என்றும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இவர் கொண்டு வந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டதால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மூலக்கதை