பாகிஸ்தான் அணியுடனான பரபரப்பு ஆட்டத்தில் பிட்னெஸ்தான் கைகொடுத்தது: கேதர் ஜாதவ் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாகிஸ்தான் அணியுடனான பரபரப்பு ஆட்டத்தில் பிட்னெஸ்தான் கைகொடுத்தது: கேதர் ஜாதவ் பேட்டி

துபாய்: துபாயில் நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவ் அணிக்குப் பெரிதும் கைகொடுத்தார்.

9 ஓவர்கள் வீசிய அவர் ஒரு மெய்டனுடன் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.   கடந்த ஐ. பி. எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய முதல் ஆட்டத்தின்போது காயம் ஏற்பட்டதால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார் ஜாதவ்.

அதன்பிறகு காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்த அவர் மீண்டுவந்து இப்போது அவரை நிரூபணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து  செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:   இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ஒருவிதமான பரபரப்பு இருக்கும். இதில் வெற்றிபெற்றது உண்மையாகவே மகிழ்ச்சியாக இருக்கிறது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு என்னுடைய ஃபிட்னெஸ் தற்போது நன்றாக உள்ளதை உணர்கிறேன். கடந்த நான்கு மாதங்களாக ஃபிட்னெஸ் தொடர்பாக நிறைய கற்றுக்கொண்டேன்.

அது இப்போது எனக்குப் பெரிதும் கைகொடுப்பதுடன் என்னை வேறு மாதிரியான கிரிக்கெட்டராக மாற்றியுள்ளது. போட்டிக்கு முன்னதாக பயிற்சி ஆட்டத்தில் நான் குறைந்த ஓவர்களே வீசினேன்.

 நான் ஒரு பந்து வீச்சாளராக இருப்பதற்குக் கடினமாக முயற்சி செய்தால் ஏற்கெனவே உள்ள மற்ற திறன்களில் சமரசம் செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்ய விரும்பவில்லை. அதனால் என் எல்லைக்குள் இருக்க முயற்சி செய்கிறேன்.

ரோஹித் ஒரு சிறந்த பேட்ஸ்மேன்.

அவர் பேட்டிங் செய்வதைப் பார்ப்பதை நாங்கள் விரும்புகிறோம்” எனக் கூறினார்.

.

மூலக்கதை