கேதர் ஜாதவின் பந்துவீச்சை கணிக்க முடியவில்லை: பாகிஸ்தான் கேப்டன் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேதர் ஜாதவின் பந்துவீச்சை கணிக்க முடியவில்லை: பாகிஸ்தான் கேப்டன் பேட்டி

துபாய்: இந்திய வீரர் கேதர் ஜாதவின் பந்து வீச்சை கணிக்க முடியவில்லை என்று பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது தெரிவித்துள்ளார்.   பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு பின்னர் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது நிருபர்களிடம்  கூறுகையில், ‘நாங்கள், குல்தீப் யாதவ் மற்றும் சாகல் இருவரது சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதற்கு ஏற்ப கள வியூகம் அமைத்தோம். ஆனால், எதிர்பாராமல் மூன்றாவதாக வந்த கேதார் ஜாதவ் எங்களின் வியூகங்களை தகர்த்தெரிந்து விக்கெட்டுக்களை சாய்த்துவிட்டார்.

கேதர் ஜாதவின் பந்துவீச்சை கணித்து ஆடுவது மிகவும் கடினமாக இருந்தது.

முதல் ஐந்து ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த பின்னர் பாபர் அசாம், சோயிப் மாலிக் இணையின் நிதான ஆட்டத்தினால் சரிவில் இருந்து அணி மீண்டது. ஆனால், அதன் பிறகு மீண்டும் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்ததால் நாங்கள் எதிர்பார்த்த ரன்களை அடிக்க முடியவில்லை.


எங்கள் அணி வீரர்கள் அனைவரும் மோசமான ஷாட்களை விளையாடி ஆட்டமிழந்தோம்.

எனினும் குரூப் போட்டிகள் என்பதால் இதை ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டு அடுத்து வரும் போட்டிகளில் இந்த தவறுகளை சரி செய்வோம்’ என்றார்.

.

மூலக்கதை