இங்கிலாந்தில் வினோதம்...... மேல்நோக்கி பாய்ந்த அருவி

தினகரன்  தினகரன்
இங்கிலாந்தில் வினோதம்...... மேல்நோக்கி பாய்ந்த அருவி

லண்டன்: இங்கிலாந்தை தாக்கிய ஹெலன் புயல் காரணமாக அருவி ஒன்று மேல்நோக்கி பாய்ந்த வீடியோ பார்வையாளர்களை அதிர்ச்சிக்கும், ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கியது. இங்கிலாந்தின் வடக்கு பகுதிகளை ஹெலன் என்ற புயல் தாக்கியது. யார்க்சயர் பகுதியில் மாலெஸ்டைன் மலையில் கம்பிரியா என்ற அருவி பாய்ந்தோடுகிறது. மணிக்கு 130 கிலோமீட்டர் காற்று வீசியதால் அருவி மேல்நோக்கி பாயத்தொடங்கியது. புயல் காரணமாக புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக மேல்நோக்கி அருவி சீறிபாய்ந்ததை கண்ட சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகள் இந்த புயல் காரணமாக பலத்த சேதமடைந்தன. பல்வேறு வீடுகளின் கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. இந்த புயலால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகளில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை