மும்பை - ஜெய்ப்பூர் விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு காது, மூக்கில் ரத்தம் வழிந்ததால் பரபரப்பு

தினகரன்  தினகரன்
மும்பை  ஜெய்ப்பூர் விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு காது, மூக்கில் ரத்தம் வழிந்ததால் பரபரப்பு

மும்பை : மும்பையில் இருந்து புறப்பட்ட ஜெய்ப்பூர் விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு நடுவானில் காது, மூக்கில் ரத்தம் வழிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் இருந்து 9W 697 என்ற ஜெட் ஏர்வேஸ் விமானம் 166 பயணிகளுடன் ஜெய்ப்பூருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் காற்று அழுத்ததை பராமரிக்கும் அமைப்பை இயக்க பணிக் குழு மறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விமானம் உயர செல்ல செல்ல பயணிகள் அனைவரும் அசோகரியத்தை உணர்ந்தனர். ஒரு கட்டத்தில் நடுவானில் பயணம் செய்து கொண்டிருந்த போது 30க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு  மூக்கு மற்றும் காது வழியாக ரத்தம் வழிந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அனைத்து பயணிகளும் சுவாச கருவி அணிய அறிவுறுத்தப்பட்டது. இருக்கைகளில் மேல் பொருத்தப்பட்ட ஆக்சிகன் மாஸ்குகள் பயணிகளின் பயன்பாட்டிற்காக இறக்கிவிடப்பட்டன. மேலும் பலர் கடுமையான தலைவலியையும் உணர்ந்தனர். உடனடியாக மீண்டும் மும்பை விமான நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானம் தரை இறக்கப்பட்டது. விமானத்தில் உள்ளே காற்றின் அழுத்தத்தை பரிசோதிக்காமல் விமானத்தை இயக்கியதால் பயணிகளுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதாக விமான போக்குவரத்துத் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டன. இந்நிலையில் விமான பணிக் குழுவினர் பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு விமான விபத்து புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.

மூலக்கதை