மேலதிகமாக இரண்டு வருடங்கள் எடுத்துக்கொள்ளும் - 12 ஆம் இலக்க மெற்றோவின் திருத்தப்பணி!!

PARIS TAMIL  PARIS TAMIL
மேலதிகமாக இரண்டு வருடங்கள் எடுத்துக்கொள்ளும்  12 ஆம் இலக்க மெற்றோவின் திருத்தப்பணி!!

பரிசின் வடக்கு பிராந்தியத்தை நோக்கி பயணிக்கும் 12 ஆம் இலக்க மெற்றோவின் விஸ்தரிப்பு பணிகளுக்கான கால அவகாசம் மேலதிகமாக இரண்டு வருடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 
டிசம்பர் 2021 ஆம் ஆண்டு முதல் இந்த விஸ்தரிக்கப்பட்ட வழிச் சேவைகள் செயற்பட தொடங்கும். Aimé Césaire மற்றும் Mairie d'Aubervilliers ஆகிய இரண்டு நிலையங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் எனவும், இவை 2021 ஆம் ஆண்டு முதல் சேவைக்குத் திரும்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த விஸ்தரிப்பு பணி, முன்னதாக 2017 ஆம் ஆண்டில் நிறைவுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு தடைகள் இந்த விஸ்தரிப்பு பணிகளின் போது ஏற்பட்டது. குறிப்பாக 2014 ஆம் ஆண்டு ஒக்டோபரில் இந்த திட்டம் முற்றாக கைவிடப்படும் நிலைக்குச் சென்றது. 
 
பின்னர், மீண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, வேலைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில், இவ்வருட மார்ச் மாதத்தில் இந்த பணிகள் பிற்போடப்பட உள்ளதாக RATP அறிவித்தது. ஒருவழியாக தற்போது மீண்டும் விஸ்தரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவுக்கு வரும் என நேற்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை