அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தை புரட்டிப் போட்ட அலி புயல்

தினகரன்  தினகரன்
அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தை புரட்டிப் போட்ட அலி புயல்

ஸ்காட்லாந்து : அலி என்று பெயரிடப்பட்டுள்ள புயல் அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் பல்வேறு பகுதிகளை புரட்டிப் போட்டுள்ளது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து பகுதிகளில் 148கிமீ வேகத்தில் வீசிய காற்றினால் மரங்கள் வேரோடு சரிந்து விழுந்தன. இந்த புயல் காரணமாக வீட்டின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. மேலும் புயல் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்ததால் பல வீடுகள் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே புயல் காரணமாக சாவோஸ் விமான நிலையத்தில் விமானங்கள் இறங்க அனுமதிப்படவில்லை. காற்றின் வேகத்தினாலும் மரங்கள் விழுந்ததாலும் 3 லட்சத்து 86 ஆயிரம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அயர்லாந்தின் கால்வே என்ற இடத்தில் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கேரவன் வாகனம் புயலால் தூக்கி வீசப்பட்டத்தில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.இந்நிலையில் அயர்லாந்தை தாக்கிய புயலுக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை