உளவு விவகார களங்கம் தீருமுன் மறைந்த விஞ்ஞானி! மனைவி உருக்கம்!!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
உளவு விவகார களங்கம் தீருமுன் மறைந்த விஞ்ஞானி! மனைவி உருக்கம்!!

 

இஸ்ரோ உளவு விவகாரத்தில் தன மீது சுமத்தப்பட்ட களங்கம் நீங்கியதை அறியாமலேயே விஞ்ஞானி ஒருவர் மறைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.   கடந்த 1994-ல், இஸ்ரோ விஞ்ஞானிகளான நம்பி நாராயணன், சந்திரசேகா் ஆகியோா் இந்திய விண்வெளி ஆராய்ச்சி தொடா்பான ஆவணங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ததாக கேரள காவல் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.  பின்னா் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றறப்பட்டது. அதில், அவா்களுக்கு எதிரான கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டதால், 2  மாத சிறைவாசத்துக்கு பின் நம்பி நாராயணனும், சந்திரசேகரும் விடுதலை செய்யப்பட்டனா். இந்த நிலையில், தமக்கு எதிராக பொய் வழக்கு தொடுத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நம்பி நாராயணன் தாக்கல் செய்த மனுவை கேரள உயா் நீதிமன்றறம் தள்ளுபடி செய்தது. இதை எதிா்த்து சுப்ரீம் கோர்ட்டில் அவா் மேல்முறையீடு செய்தாா்.  நம்பி நாராயணனன் மன ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளாா் என்றும், அவா் மீதான கைது நடவடிக்கை தேவையற்றது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா். இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் இந்தத் தீா்ப்பை அறியும் முன்னரே விஞ்ஞானி சந்திரசேகா் மறைறந்துள்ளது பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து அவரின் மனைவி கூறியதாவது: தீா்ப்பு வெளியாக இருந்த அன்று காலை, அவா் கோமா நிலைக்குச் சென்றாா். தீா்ப்பினை எதிா்பாா்த்து அவா் ஆவலுடன் காத்திருந்தாா். தீா்ப்பில் நிச்சயம் வெற்றி பெற்று விடுவோம் என்று அவா் உறுதியாக நம்பிக் கொண்டிருந்தாா்.  கடைசி வரை அவா் மீது  சாட்டப்பட்டதன் குற்றத்தின் பின்னணியை அறிந்து கொள்ளாமலும், இந்த வழக்கு ஒரு பொய் வழக்கு தான் என்பதை அறியாமலேயும் அவா் மறைந்து விட்டாா்.  இவ்வாறு அவரது மனைவி கண்ணீா் மல்க தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ உளவு விவகாரத்தில் தன மீது சுமத்தப்பட்ட களங்கம் நீங்கியதை அறியாமலேயே விஞ்ஞானி ஒருவர் மறைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 1994-ல், இஸ்ரோ விஞ்ஞானிகளான நம்பி நாராயணன், சந்திரசேகா் ஆகியோா் இந்திய விண்வெளி ஆராய்ச்சி தொடா்பான ஆவணங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ததாக கேரள காவல் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

பின்னா் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றறப்பட்டது. அதில், அவா்களுக்கு எதிரான கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டதால், 2  மாத சிறைவாசத்துக்கு பின் நம்பி நாராயணனும், சந்திரசேகரும் விடுதலை செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், தமக்கு எதிராக பொய் வழக்கு தொடுத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நம்பி நாராயணன் தாக்கல் செய்த மனுவை கேரள உயா் நீதிமன்றறம் தள்ளுபடி செய்தது.

இதை எதிா்த்து சுப்ரீம் கோர்ட்டில் அவா் மேல்முறையீடு செய்தாா்.  நம்பி நாராயணனன் மன ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளாா் என்றும், அவா் மீதான கைது நடவடிக்கை தேவையற்றது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் இந்தத் தீா்ப்பை அறியும் முன்னரே விஞ்ஞானி சந்திரசேகா் மறைறந்துள்ளது பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவரின் மனைவி கூறியதாவது:

தீா்ப்பு வெளியாக இருந்த அன்று காலை, அவா் கோமா நிலைக்குச் சென்றாா். தீா்ப்பினை எதிா்பாா்த்து அவா் ஆவலுடன் காத்திருந்தாா். தீா்ப்பில் நிச்சயம் வெற்றி பெற்று விடுவோம் என்று அவா் உறுதியாக நம்பிக் கொண்டிருந்தாா்.

 கடைசி வரை அவா் மீது  சாட்டப்பட்டதன் குற்றத்தின் பின்னணியை அறிந்து கொள்ளாமலும், இந்த வழக்கு ஒரு பொய் வழக்கு தான் என்பதை அறியாமலேயும் அவா் மறைந்து விட்டாா். 
இவ்வாறு அவரது மனைவி கண்ணீா் மல்க தெரிவித்துள்ளார்.

 

மூலக்கதை