பரிஸ் - தாக்குதலுக்கு இலக்கான ஓரினச்சேர்க்கையாளர்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ்  தாக்குதலுக்கு இலக்கான ஓரினச்சேர்க்கையாளர்!!

வசிப்பிடத்தை விட்டு வெளியேறும்படி பணித்து ஓரினச்சேர்க்கை தம்பதியினரில் ஒருவர் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 
 
பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் குறித்த இரு ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களில் ஒருவரே கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கப்பட்டுள்ளார்.   Arnaud Gagnoud எனும் நகைச்சுவை நடிகரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். 20 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் இவர்களை, அப்பகுதியை விட்டு வெளியேறும் படி தெரிவித்து மூன்று நபர்கள் தலைக்கவசம் போன்ற பொருட்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். 'இது போன்ற சம்பவம் இடம்பெறும் என்பது நான் முன்னரே அறிந்திருந்தது தான்!' என அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார். அவர் நேற்று புதன்கிழமை 20 ஆம் வட்டார காவல்துறையினரிடமும் அரச வழக்கறிஞர் அலுவலகத்திடமும் புகார் அளித்துள்ளார். 
 
நண்பர் ஒருவரை பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் தாக்கப்பட்டுள்ளார் என அவரின் துணை தெரிவித்துள்ளார். இவர்கள் முன்னதாகவும் பல தடவைகள் அச்சுறுத்தலுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை