ஹர்திக் பாண்டியா நலமுடன் உள்ளார்: பிசிசிஐ விளக்கம்

தினகரன்  தினகரன்
ஹர்திக் பாண்டியா நலமுடன் உள்ளார்: பிசிசிஐ விளக்கம்

துபாய்: பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியின்போது காயமடைந்த இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா நலமுடன் இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியின்போது இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா காயமடைந்தார். தசைப்பிடிப்பு காரணமாக பந்துவீசும் போது நிலை தடுமாறி கீழே விழுந்த பாண்டியாவால் எழுந்து நடக்க முடியவில்லை. இதையடுத்து மருத்துவ குழு அவரை பரிசோதித்த பிறகு ஸ்டிரெச்சரில் தூக்கி சென்றனர். இதனால் மைதானத்தில் சிறிதுநேரம் பதற்றம் நிலவியது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா நலமுடன் இருப்பதாக பிச்சிஐ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஹர்திக் பாண்டியாவின் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவரால் எழுந்து நிற்க முடிகிறது. மருத்துவ குழுவினர் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றார். இதனால் நாளை நடைபெறவுள்ள வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளன.

மூலக்கதை