திறப்பு//● மதுரை நகரை ஆக்கிரமித்து பெட்டிக்கடைகள் ● அரசியல்வாதிகள் ஆசியுடன் அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
திறப்பு//● மதுரை நகரை ஆக்கிரமித்து பெட்டிக்கடைகள் ● அரசியல்வாதிகள் ஆசியுடன் அதிகரிப்பு

மதுரை:மதுரையில் போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறாக பல இடங்களில் அரசியல்வாதிகளின் துணையுடன் பெட்டிக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.நகரில் ஆக்கிரமிப்புகளுக்கு பெட்டிக்கடைகள் அச்சாரமிட்டு வருகின்றன. ஓரிடத்திற்கு அனுமதி வாங்கி வேறு ஒரு இடத்தில் வைக்கின்றனர். இந்த முறைகேட்டை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை கண்டுகொள்வதில்லை. தவிர, ஊனமுற்றோருக்கான கடை உரிமம் புதுப்பிக்காத நிலையில், பல இடங்களில் பழைய பெட்டிகளில் பெயின்ட் அடித்து 'அனுமதி பெற்ற கடை' என அறிவிப்புடன் ரோட்டோரத்தில் தொடர்ந்து செயல்படுகின்றன. இக்கடைகள் மாநகராட்சி பில் கலெக்டர்கள் மற்றும் போலீசாரின் ஆசியுடன் செயல்படுகின்றன. கடை உரிமங்களை அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. இதை பயன்படுத்தி ஆக்கிரமிப்பாளர்கள் சில அரசியல்வாதிகளின் பெயரை கூறி அதிகாரிகளிடம் 'முடிந்தால் அகற்றி பாருங்கள்' என சவால் விடுகின்றனர்.மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'பெட்டிக்கடைகளுக்கு மாநகராட்சி அனுமதி அளிப்பதே இல்லை. நீதிமன்ற உத்தரவுபடி ஒரு கடைக்கு மட்டும் சமீபத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. உரிமம் இல்லாமல் கடைகளை நகரமைப்பு பிரிவினர் அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.

மூலக்கதை