பங்கு வெளியீட்டில் ‘தினேஷ் இன்ஜினியர்ஸ்’

தினமலர்  தினமலர்

புது­டில்லி : தக­வல் தொடர்பு உள்­கட்­ட­மைப்பு நிறு­வ­ன­மான, ‘தினேஷ் இன்­ஜி­னி­யர்ஸ்’ நிறு­வ­னத்­தின் புதிய பங்கு வெளி­யீடு, 28ம் தேதி துவங்­கு­கிறது.

நிறு­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம், 185 கோடி ரூபாயை திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளது. இதற்­காக, ஒரு பங்­கின் விலையை, 183 – 185 ரூபாய் என நிர்­ண­யித்­துள்­ளது. நிறு­வ­னத்­தின் புதிய பங்கு வெளி­யீடு, 28ம் தேதி துவங்கி, அக்., 3ம் தேதி வரை நடை­பெற இருக்­கிறது.

இந்­நி­று­வ­னம், 185 கோடி ரூபாய் நிதியை திரட்­டு­வ­தற்­காக, 1 கோடி பங்­கு­களை வெளி­யிட இருக்­கிறது. பங்கு வெளி­யீட்­டின் மூலம் திரட்­டப்­படும் நிதியை, வணி­கத்தை விரி­வாக்­கம் செய்­ய­வும், நிர்­வாக செல­வு­க­ளுக்­கா­க­வும் பயன்­ப­டுத்த உள்­ளது. இந்த பங்கு வெளி­யீட்­டுக்­கான பணி­களை, ‘ஹெம் செக்­யூ­ரிட்­டீஸ்’ நிறு­வ­னம் மேற்­கொள்­கிறது. இந்­நி­று­வ­னப் பங்­கு­கள், மும்பை பங்­குச் சந்தை, தேசிய பங்­குச் சந்தை ஆகிய சந்­தை­களில் பட்­டி­ய­லி­டப்­பட உள்ளன.

மூலக்கதை