அணைகளை பாதுகாக்க ரூ.3,466 கோடியில் திட்டம் தமிழகத்துக்கு ரூ.543 கோடி; மத்திய மந்திரிசபை ஒப்புதல்

PARIS TAMIL  PARIS TAMIL
அணைகளை பாதுகாக்க ரூ.3,466 கோடியில் திட்டம் தமிழகத்துக்கு ரூ.543 கோடி; மத்திய மந்திரிசபை ஒப்புதல்

 அணைகளை பாதுகாத்து பராமரிக்கும் திட்டத்தை நிறைவேற்ற ரூ.3,466 கோடி செலவாகும் என மறுமதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு நேற்று தனது ஒப்புதலை வழங்கியது.

இதில் ரூ.2,628 கோடியை உலக வங்கி வழங்கும். ரூ.747 கோடியை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தரும். எஞ்சிய ரூ.91 கோடியை மத்திய நீர் ஆணையம் அளிக்கும்.

இதில் தமிழக அணைகள் பாதுகாப்புக்கு ஒதுக்கப்படும் தொகை ரூ.543 கோடி ஆகும்.

அங்கன்வாடி ஊழியர்கள் மாத சம்பளத்தை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரத்து 500 ஆகவும், சிறிய அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுகிற ஊழியர்கள் சம்பளம் ரூ.2 ஆயிரத்து 250–ல் இருந்து ரூ.3 ஆயிரத்து 500 ஆகவும், அங்கன்வாடி உதவியாளர் சம்பளம் ரூ.1,500–ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 250 ஆகவும் உயர்த்தப்படுகிறது. மேலும் மாதாந்திர ஊக்கத்தொகை ரூ.250–ம் வழங்கப்படும். இதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

மூலக்கதை