சுவிஸ் வங்கிக்கு ரூ.170 கோடி பரிமாற்றம் செய்த மல்லையா

தினமலர்  தினமலர்
சுவிஸ் வங்கிக்கு ரூ.170 கோடி பரிமாற்றம் செய்த மல்லையா

புதுடில்லி: விஜய் மல்லையாவின் லண்டன் வங்கி கணக்கில் இருந்து, சுவிஸ் வங்கி கணக்குக்கு, 170 கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடந்த விபரம், சி.பி.ஐ.,க்கு தெரியவந்துள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையா, எஸ்.பி.ஐ., உட்பட, பல்வேறு வங்கிகளில், பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல், 2015ல், வெளிநாடு தப்பி சென்றார். அதே ஆண்டு, விசாரணைக்கு ஆஜராவதற்காக, இந்தியா திரும்பினார். அப்போது, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டும், மல்லையா கைது செய்யப்படவில்லை. 'கைது செய்ய சட்ட ரீதியாக போதிய காரணங்கள் இல்லாததால், மல்லையாவை கைது செய்யவில்லை' என, சி.பி.ஐ., தற்போது தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 2017ல், விஜய் மல்லையாவின் லண்டன் வங்கி கணக்கில் இருந்து, 170 கோடி ரூபாய், அவனது சுவிஸ் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டது. இந்த பரிமாற்றத்தை, பிரிட்டன் பொருளாதார புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கண்காணித்தனர். இந்த தகவலை, உடனடியாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதையடுத்து, மல்லையாவுக்கு கடன் வழங்கிய, 13 வங்கிகளும் ஒன்றிணைந்து, பிரிட்டனில் உள்ள அவரது சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்தன.

மூலக்கதை