அமெரிக்கா - சீனா இடையிலான வணிகப் போர் 20 ஆண்டுகள் வரை நீடிக்கும்: ஜேக் மா அறிவிப்பு

தினகரன்  தினகரன்
அமெரிக்கா  சீனா இடையிலான வணிகப் போர் 20 ஆண்டுகள் வரை நீடிக்கும்: ஜேக் மா அறிவிப்பு

அமெரிக்கா: அமெரிக்கா - சீனா இடையிலான வணிகப் போர் இருபதாண்டுகள் வரை நீடிக்கும் என அலிபாபா நிறுவனத்தின் செயல்தலைவர் ஜேக் மா தெரிவித்துள்ளார். சீனாவின் ஹாங்சூ நகரில் 1999ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அலிபாபா உலகின் ஐந்தாவது பெரிய இணையத்தள வணிக நிறுவனமாகத் திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும் செயல் தலைவருமான ஜேக் மா பெய்ஜிங்கில் முதலீட்டாளர்களிடையே பேசினார். அப்போது சீனாவும், அமெரிக்காவும் ஒன்றுக்கொன்று இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதிக்கும் வணிகப் போரில் இறங்கியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய போக்கு இன்னும் இருபதாண்டுகள் வரை நீடிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். டொனால்டு டிரம்ப் பதவிக்காலத்துக்குப் பின் பல ஆண்டுகள் ஆனாலும் இரு நாடுகளுக்கு இடையே உள்ள போட்டி குறைய வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்க - சீன வணிகப் போரால் அலிபாபா நிறுவனத்தின் தொழில் பாதிக்கப்பட்டிருப்பதாக ஜேக் மா ஒப்புக்கொண்டார்.

மூலக்கதை