2வது சீசன் துவக்கம் ஊட்டி மலை ரயிலில் செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
2வது சீசன் துவக்கம் ஊட்டி மலை ரயிலில் செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம்

குன்னூர்: ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்ய உள்நாடு மட்டுமல்லாது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தை தவிர்க்க மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை 5 பெட்டிகளுடன் மலை ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து அதற்கான சோதனை ஓட்டம் இருமுறை நடந்தது.

தொடர் விடுமுறை மற்றும் சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் தடையின்றி பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் 2வது சீசன் துவங்கி உள்ளதால் மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க துவங்கி உள்ளது. குன்னூரிலிருந்து ஊட்டி செல்ல சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.   இவ்வழித்தடத்திலும் 5 பெட்டிகளுடன் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வரும் அக். 1ம் தேதி முதல் ரயில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகையில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் சுற்றுலா ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

.

மூலக்கதை