ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது

தினமலர்  தினமலர்
ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது

கோலாலம்பூர்: ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப்ரசாக் கைது செய்யப்பட்டார்.
மலேசிய அபிவிருத்தி வாரியத்தின் நிதியை நஜிப் ரசாக் முறைகேடாக எடுத்து சொத்து குவிப்பில் ஈடுபட்டார் என புகார் கூறப்பட்டது. அதன் ஒரு பகுதியாக அவருக்கு சொந்தமான கட்டடங்களில் சோதனை நடந்தது. இதில் நகைகள், பணம் கைப்பற்றப்பட்டன. 408 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இது தொடர்பாக நஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவி மன்சோரிடமும் ஊழல் தடுப்பு போலீஸ் படையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நஜிப்ரசாக்கை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர் மீது மலேசிய ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 23(1) ன் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.

மூலக்கதை