பங்குச்சந்தைப் பட்டியலிடும் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் ஐசிஐசிஐ தலைமைச் செயல் அலுவலருக்கு செபி நோட்டீஸ்

தினகரன்  தினகரன்
பங்குச்சந்தைப் பட்டியலிடும் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் ஐசிஐசிஐ தலைமைச் செயல் அலுவலருக்கு செபி நோட்டீஸ்

டெல்லி: பங்குச்சந்தைப் பட்டியலிடும் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுத் தொடர்பாகப் பங்குச்சந்தை வாரியத்துடன் பேசித் தீர்க்க ஐசிஐசிஐ வங்கி முயன்று வருகிறது. ஐசிஐசிஐ வங்கி வீடியோகான் நிறுவனத்துக்குக் கடன் வழங்கியதற்குக் கைம்மாறாக ஐசிஐசிஐ தலைமைச் செயல் அலுவலர் சாந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனத்தில் வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத் பெருந்தொகையை முதலீடு செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐசிஐசிஐ வங்கியில் உள்விசாரணை நடந்துவரும் நிலையில் சாந்தா கோச்சார் விடுப்பில் உள்ளார். இந்நிலையில் பங்குச்சந்தை பட்டியலிடும்போது ஒப்புக்கொண்ட விதிமுறைகளை மீறியதாகக் கூறி இந்தியப் பங்குச்சந்தை வாரியம் ஐசிஐசிஐ வங்கிக்கும் சாந்தா கோச்சாருக்கும் விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பியுள்ளது. விதிமுறைகளை மீறவில்லை எனக் கூறிவரும் ஐசிஐசிஐ வங்கியும் சாந்தா கோச்சாரும் இந்தச் சிக்கலைப் பேசித் தீர்க்க முயல்வதாக செபி தெரிவித்துள்ளது.

மூலக்கதை