தமிழகத்தில் நடப்பது மினி பாஜ ஆட்சி: அமமுக புகழேந்தி பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகத்தில் நடப்பது மினி பாஜ ஆட்சி: அமமுக புகழேந்தி பேச்சு

தஞ்சை: அமமுக சார்பில் தஞ்சையில் நேற்று அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி பேசியதாவது:
இந்த மாவட்டத்தை சேர்ந்த வைத்திலிங்கம் சசிகலா காலில் கிடந்து பெரிய ஆள் ஆனார்.

இதுபோல எடப்பாடி பழனிசாமியும் சசிகலாவை அண்டி இருந்ததால் இன்று முதல்வர் ஆனார். சசிகலா இல்லாவிட்டால் இவர்கள் யார் என்றே தெரியாமல் போய் இருக்கும்.

இப்போது அவர்கள் சசிகலாவை மறந்து போய்விட்டார்கள். டிடிவி முதல்வரானால் அமைச்சர் காமராஜ் துவரம் பருப்பு கொள்முதல் ஊழல் வழக்கில் கைது செய்யப்படுவார்.

டிடிவி தான் அமைச்சர்களை எல்லாம் காப்பாற்றி வைத்திருந்தார்.

விரைவில் தேர்தல் வரப்போகிறது. இபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் சேர்ந்து பிரசாரத்துக்கு வந்தால் நமக்கு சாதகமான தீர்ப்பு தேர்தலில் வரும்.

நாம் எளிதில் வெற்றி பெற்று விடலாம். காரணம் அவர்களிடம் ஒற்றுமை இல்லை.

கருத்து முரண்பாடு உள்ளது. ஓட்டு கேட்டு வரும் அதிமுகவினரை மக்களே விரட்டி விடுவார்கள்.
பா. ஜ.

செயலாளர் எச். ராஜா போலீசையும், கோர்ட்டையும் தரக்குறைவாக விமர்சிக்கிறார். ஆனால் அவரை கைது செய்ய முடியவில்லை.

சாதாரணமானவர்கள் இப்படி பேசினால் விட்டு விடுவார்களா? தமிழகத்தில் மினி பா. ஜ. ஆட்சி நடக்கிறது.

டிடிவி மட்டும் இல்லாவிட்டால் அதிமுகவை மோடியிடம் விற்று இருப்பார்கள்.

நாம் அதிமுகவை மீட்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

.

மூலக்கதை