மதுராந்தகம் பகுதிகளில் அதிக பயணிகளை ஏற்றும் ஷேர் ஆட்டோக்கள்: விபத்து பீதி அதிகரிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மதுராந்தகம் பகுதிகளில் அதிக பயணிகளை ஏற்றும் ஷேர் ஆட்டோக்கள்: விபத்து பீதி அதிகரிப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் நகரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் அரசு பேருந்து வசதி இல்லாததால், அங்கிருந்து அதிகளவு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஷேர் ஆட்டோக்கள் செல்கின்றன. இதனால் அப்பகுதியில் விபத்து அபாய பீதி அதிகரித்துள்ளது.

மதுராந்தகம் நகரை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் அரசு பேருந்துகள் முறையாக இயக்கப்படவில்லை.

மேலும், ஒருசில கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லை. இதனால் இப்பகுதி மக்கள், தங்களது பல்வேறு பணிகளுக்கு சென்று வர ஷேர் ஆட்டோக்களையே நாடி வருகின்றனர்.

 இச்சந்தர்ப்பத்தை ஷேர் ஆட்டோ டிரைவர்கள் பயன்படுத்திக்கொண்டு, தங்களது ஆட்டோவில் சாலை விதிகளை மீறி, 10-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.

குறிப்பாக சூனாம்பேடு, சித்தாமூர், செய்யூர், அச்சிறுப்பாக்கம் போன்ற பகுதிகளில் இருந்து மதுராந்தகம் வரை இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களில் அதிக நபர்களை ஏற்றி வருகின்றனர். இதனால் அந்த ஆட்டோக்களில் கட்டுப்பாட்டை இழந்து, விபத்துகளில் சிக்கும் அபாயநிலை நீடித்து வருகிறது.

இதுபோன்று அதிகளவு பயணிகளை ஏற்றி வரும் ஆட்டோ டிரைவர்களிடம் போக்குவரத்து மற்றும் போலீசார் பணத்தை பெற்றுக்கொண்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர் என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

.

மூலக்கதை