திருவள்ளூர் அருகே மேய்ச்சலில் இருந்த 2 மாடுகள் திருட்டு: மினி டெம்போவுடன் 2 பேர் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவள்ளூர் அருகே மேய்ச்சலில் இருந்த 2 மாடுகள் திருட்டு: மினி டெம்போவுடன் 2 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மேய்ச்சலில் இருந்த 2 மாடுகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய மினி டெம்போவையும் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (39). பால் வியாபாரி.

இவர், கடந்த 17ம் தேதி தனக்கு சொந்தமான 2 மாடுகளை, புங்கத்தூர் ஏரியில் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, தனது செல்போனை எடுக்காமல் வந்து விட்டார்.

அதனால் வீட்டுக்கு சென்று, செல்போனை எடுத்து கொண்டு மீண்டும் ஏரிக்கு வந்தார். மேய்ச்சலில் இருந்த 2 மாடுகளையும் காணவில்லை.

அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில், நேற்று மதியம், திருவள்ளூரில், டவுன் போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக 2 மாடுகளை ஏற்றி வந்த மினி டெம்போவை நிறுத்தி, ஓட்டுநர் உட்பட 2 பேரை சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர். இதில், அவர்கள் புட்லூர் கிராமத்தை சேர்ந்த ரேணுபாபு (35), காரணிபேட்டையை சேர்ந்த பதி (28) என்பதும், புங்கத்தூர் ஏரியில் மேய்ச்சலில் இருந்த 2 மாடுகளையும் திருடி வந்ததையும் ஒப்பு கொண்டனர்.

இதையடுத்து இருவரையும் கைது செய்து, திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

2 மாடுகளுடன் மினி டெம்போவையும் பறிமுதல் செய்தனர்.

.

மூலக்கதை