பல்லாவரம் ரேடியல் சாலையில் பாதுகாப்பின்றி சாலை விரிவாக்க பணி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பல்லாவரம் ரேடியல் சாலையில் பாதுகாப்பின்றி சாலை விரிவாக்க பணி

பல்லாவரம்: பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் வரை செல்லும் ரேடியல் சாலையின் இருபுறமும் சாப்ட்வேர் நிறுவனம், மருத்துவமனை, அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. இதன் காரணமாக பல்லாவரம் ரேடியல் சாலை எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.

200 அடி சாலையான இதில், நாளுக்கு நாள் நெரிசல் ஏற்பட்டுவருவதால் தற்போது இந்த சாலை 4 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன்படி பல்லாவரம் மேம்பாலத்தில் இருந்து பல்லாவரம் பெரிய ஏரி உட்பட ரேடியல் சாலைகளின் இருபுறமும் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இதற்காக சாலையோரங்களில் போடப்பட்டிருந்த தடுப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு ஒரு சில இடங்களில் திறந்த நிலையில் உள்ளது.

இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் மின்விளக்குகள் இல்லாததால் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கின் வெளிச்சத்தால் கண் கூச்சம் ஏற்பட்டு விபத்தில் சிக்குகின்றனர்.

இந்த சாலை விரிவாக்க பணியை மேற்கொள்ளும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், எச்சரிக்கை விளம்பர பதாகைகள் மற்றும் ஆபத்தை குறிக்கும் வகையில் இரவிலும் ஒளிரக்கூடிய ஸ்டிக்கர்களை பயன்படுத்த வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.

.

மூலக்கதை