மல்லையாவை கைது செய்யாதது ஏன்? சி.பி.ஐ., விளக்கம்

தினமலர்  தினமலர்
மல்லையாவை கைது செய்யாதது ஏன்? சி.பி.ஐ., விளக்கம்

புதுடில்லி : 'விஜய் மல்லையா, 2015 நவம்பரில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து நாடு திரும்பிய போது, அவரை கைது செய்வதற்கு, சட்டப்படி, போதுமான காரணங்கள் இல்லை' என, சி.பி.ஐ., தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளில், பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல், வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற மல்லையா, வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக, 2015, நவ., 24ல், லண்டனில் இருந்து நாடு திரும்பினார். தேடப்படும் குற்றவாளியாக மல்லையாவை அறிவித்திருந்த போதும், அப்போது சி.பி.ஐ., அதிகாரிகள், அவரை கைது செய்யவில்லை.

இதற்கான காரணம் குறித்து, சி.பி.ஐ., தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 2015 அக்டோபரில், தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட மல்லையா, அதே ஆண்டு நவம்பரில், வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக, நாடு திரும்பினார். அதிகாரிகளின் விசாரணைக்கு அவர் ஒத்துழைத்தார். வேண்டிய ஆவணங்களை சமர்ப்பித்தார். அந்த நேரத்தில், அவர், ராஜ்யசபா, எம்.பி.,யாக இருந்தார். தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட போதும், அவரை கைது செய்வதற்கு, சட்ட ரீதியில் போதிய காரணங்கள் இல்லாததால், கைது செய்ய முடியவில்லை. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை