பாக்., ராணுவ தளபதியை கட்டிப் பிடித்ததை சித்து தவிர்த்திருக்கலாம்

தினகரன்  தினகரன்
பாக்., ராணுவ தளபதியை கட்டிப் பிடித்ததை சித்து தவிர்த்திருக்கலாம்

புதுடெல்லி: பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் கடந்த மாதம் பதவி ஏற்றார். இந்த விழாவில் பங்கேற்ற முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் சுற்றுலா துறை அமைச்சரான நவ்ஜோத் சிங் சித்து  அந்நாட்டு ராணுவ தளபதி ஜாவித் பாஜ்வாவை கட்டிப்பிடித்து  மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது பற்றி கூறுகையில், “பாகிஸ்தான் ராணுவ தளபதியை பஞ்சாப் அமைச்சர் சித்து கட்டிப் பிடித்தது தவறான முன்னுதாரணம். இது வீரர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சித்து இதை தவிர்த்திருக்க வேண்டும்” என்றார்.

மூலக்கதை