கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் சிக்கிய பிஷப் முன்ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் சிக்கிய பிஷப் முன்ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

திருவனந்தபுரம்: கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜலந்தர் பிஷப்பின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை கேரள உயர் நீதிமன்றம் செப்.25ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.கேரள மாநிலம் குரவிலங்காட்டை சேர்ந்த கன்னியாஸ்திரியை ஜலந்தர் பிஷப் பிராங்கோ பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட புகாரில் பிஷப் பிராங்கோ நேற்று கேரள உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ராஜா விஜயராகவன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதையடுத்து விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.  திடீர் மாயம்?: இதற்கிடையே பிஷப் பிராங்கோவை திடீரென நேற்று முன்தினம் முதல் காணவில்லை. அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார் என்பது ெதரியவில்லை. கடந்த 16ம் தேதி வரை அவர் ஜலந்தர் ஆயர் இல்லத்தில்தான் இருந்தார். அவர் கேரளா சென்றுள்ளாரா? அல்லது வேறு எங்காவது ெசன்றுவிட்டாரா? என்பது குறித்து ஆயர் இல்லத்தை சேர்ந்தவர்கள் தகவல் அளிக்க மறுத்துவிட்டனர். எனினும் பிஷப் பிராங்கோ இன்று கொச்சிக்கு விமானம் மூலம் வரலாம் என போலீசார் கருதுகின்றனர்.

மூலக்கதை