வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற ரூ. 5 லட்சம் கடல் அட்டை பறிமுதல்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற ரூ. 5 லட்சம் கடல் அட்டை பறிமுதல்!

 

கடல் அட்டைகளால் பல நன்மைகள் விளைவதால் அதனைப் பிடிக்க அரசின் சார்பில் தடை விதிக்கப் பட்டு அது நடைமுறையில் உள்ளது. வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற  200 கிலோ எடையுள்ள, ரூ.5 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  ராமநாதபுரம் மாவட்டம் மன்னார்வளைகுடா கடல் பகுதியில் காணப்படும் அரிய வகையான கடல்வாழ் உயிரினம் கடல் அட்டை. இவற்றை பிடிக்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. மேலும் அத்துமீறிப் பிடித்தால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கும் வகையில் கடல்வாழ் உயிரின பாதுகாப்பு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.  ஆனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், வேதாளை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கடல் அட்டை கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.  இதனை தடுக்க கடலோர காவல் படை மற்றும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கடல் அட்டைகளால் பல நன்மைகள் விளைவதால் அதனைப் பிடிக்க அரசின் சார்பில் தடை விதிக்கப் பட்டு அது நடைமுறையில் உள்ளது.

வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற  200 கிலோ எடையுள்ள, ரூ.5 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

 ராமநாதபுரம் மாவட்டம் மன்னார்வளைகுடா கடல் பகுதியில் காணப்படும் அரிய வகையான கடல்வாழ் உயிரினம் கடல் அட்டை. இவற்றை பிடிக்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. மேலும் அத்துமீறிப் பிடித்தால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கும் வகையில் கடல்வாழ் உயிரின பாதுகாப்பு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், வேதாளை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கடல் அட்டை கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. 

இதனை தடுக்க கடலோர காவல் படை மற்றும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மூலக்கதை