3 வங்கிகள் ஒருங்கிணைப்பு: மத்திய அமைச்சர் அறிவிப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
3 வங்கிகள் ஒருங்கிணைப்பு: மத்திய அமைச்சர் அறிவிப்பு!

கடன் வசதிகளை அதிகப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும், பேங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகிய 3 வங்கிகளும்  விரைவில் இணைக்கப்பட உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார். இது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தேனா வங்கி, பேங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி ஆகிய அரசு வங்கிகளை ஒன்றாக இணைப்பதன் மூலம், வங்கிகள் இன்னும் வலிமை பெற்று, நிலைத்தன்மையுடன் செயலாற்றி, மக்களுக்கு அதிகமான கடன்களை வழங்கும் ஸ்திரத்தன்மை பெறும். தற்போது வங்களின் கடன் அளிக்கும் வசதி மிகவும் மோசமாக இருக்கிறது, இதனால், கார்ப்பரேட் துறை முதலீடு பாதிக்கிறது. அதிகமான வாராக்கடனை அளித்து வங்கிகளின் சொத்துக்கள் குறைந்து வருகின்றன. இந்த மூன்று வங்கிகளையும் இணைப்பதன் மூலம் வங்கிச் செயல்பாடுகள் சிறப்பாக அமையும். இந்த இணைப்பு மூலம் இந்த 3 வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கோ, அதிகாரிகளுக்கோ  எந்தவிதமான பாதிப்பும், குறைபாடும் ஏற்படாது. பெரும்பாலான பங்குகள் அரசின் கைவசமே இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடன் வசதிகளை அதிகப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும், பேங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகிய 3 வங்கிகளும்  விரைவில் இணைக்கப்பட உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

தேனா வங்கி, பேங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி ஆகிய அரசு வங்கிகளை ஒன்றாக இணைப்பதன் மூலம், வங்கிகள் இன்னும் வலிமை பெற்று, நிலைத்தன்மையுடன் செயலாற்றி, மக்களுக்கு அதிகமான கடன்களை வழங்கும் ஸ்திரத்தன்மை பெறும்.

தற்போது வங்களின் கடன் அளிக்கும் வசதி மிகவும் மோசமாக இருக்கிறது, இதனால், கார்ப்பரேட் துறை முதலீடு பாதிக்கிறது. அதிகமான வாராக்கடனை அளித்து வங்கிகளின் சொத்துக்கள் குறைந்து வருகின்றன. இந்த மூன்று வங்கிகளையும் இணைப்பதன் மூலம் வங்கிச் செயல்பாடுகள் சிறப்பாக அமையும்.

இந்த இணைப்பு மூலம் இந்த 3 வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கோ, அதிகாரிகளுக்கோ  எந்தவிதமான பாதிப்பும், குறைபாடும் ஏற்படாது. பெரும்பாலான பங்குகள் அரசின் கைவசமே இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

மூலக்கதை