மூன் ஜே இன்னை கட்டிப்பிடித்து வரவேற்ற கிம் ஜோங்

தினமலர்  தினமலர்
மூன் ஜே இன்னை கட்டிப்பிடித்து வரவேற்ற கிம் ஜோங்

பையோங்க்: முதன்முறையாக தென்கொரிய அதிபர் வடகொரியா சென்றார். அவரை விமான நிலையத்தில் கட்டிபிடித்து வரவேற்றார் வட கொரியா அதிபர் கிம்ஜோங் .

சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது, அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட சம்மதம் தெரிவித்த வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார்.

இதையடுத்து இன்று தென்கொரியா அதிபர் மூன் ஜே இன் வடகொரியா பயணம் மேற்கொண்டார். பையோங்க் விமான நிலையம் வந்திறங்கிய மூன் கேஜஇன்னை, வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் கட்டிதழுவி வரவேற்றார். பின்னர் அதிபர் மாளிகைக்கு காரில் அழைத்துச்சென்றார். இருவரும் ஒரே காரில் பயணித்தனர் அப்போது வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். ஆகியோர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தையை நடத்துகின்றனர். பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என தெரிகிறது.

மூலக்கதை