ராஜீவ் பன்சாலுக்கு ரூ.12.17 கோடி வழங்க இன்போசிசுக்கு உத்தரவு

தினகரன்  தினகரன்
ராஜீவ் பன்சாலுக்கு ரூ.12.17 கோடி வழங்க இன்போசிசுக்கு உத்தரவு

புதுடெல்லி: இன்போசிஸ் நிறுவன முதன்மை நிதி அதிகாரியாக பணியாற்றிய ராஜீவ் பன்சாலுக்கு ₹12.17 கோடி தொகையை வட்டியுடன் வழங்க இன்போசிசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.இன்போசிஸ் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரியாக இருந்தவர் ராஜீவ் பன்சால். 2015ம் ஆண்டு இவர் ராஜினாமா செய்தார். இவருக்கு சட்ட ரீதியாக வழங்க வேண்டிய பணி நீக்க கொடையாக ₹17.38 கோடியை இன்போசிஸ் வழங்க வேண்டும். மாறாக, ₹5 கோடி மட்டுமே வழங்கிய இன்போசிஸ், இணை நிறுவனர் நாராயணமூர்த்தி உள்ளிட்டோரின் எதிர்ப்பால் மீதி தொகையை தரவில்லை. இதையடுத்து தீர்ப்பாயத்தை நாடினார் பன்சால். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், பணி நீக்க கொடையாக ₹12.17 கோடியை ராஜீவ் பன்சாலுக்கு வட்டியுடன் தரவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை