பாப்பாங்குளத்தில் சாலை வசதி இல்லாமல் அவதி: அரசு உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள்

தினமலர்  தினமலர்

மானாமதுரை;மானாமதுரை அருகே பாப்பாங்குளத்தில் சாலை வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.மானாமதுரை இடைக்காட்டூர் அருகே சிறுகுடி ஊராட்சிக்குப்பட்ட பாப்பாங்குளத்தில் 60 க்கும்மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 2012 ம் ஆண்டுஅந்த பகுதியில் சாலை போடுவதில் ஏற்பட்ட தகராறு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் ஏற்பட்டதவறினால் பாதை ஓரத்தில் இருந்த 22 வீடுகளில் 3 வீடுகள் முழுமையாகவும் 19 வீடுகள் குறைந்த அளவு ஆக்கிரமிப்பும்அகற்றப்பட்டது.இதற்கிடையே இடிக்கப்பட்ட வீடுகளை கட்டிக்கொடுக்குமாறு அப்பகுதி மக்கள் மற்றும் கம்யூ.,கட்சிகள்போராட்டத்தில் ஈடுபட்டன. இதனையடுத்து தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அப்போது 27 லட்சம்ஒதுக்கீடு செய்து இடிக்கப்பட்ட வீடுகளை கட்டிக்கொடுக்கவும், அந்த பகுதியில் சாலை வசதி செய்துகொடுக்கவும் உத்தரவிட்டது.தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் மட்டும்கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பகுதியில் சாலை வசதி எதுவும் செய்து கொடுக்கவில்லைஎன அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.மேலும் மழை காலங்களில் சேறும், சகதியுமாகஇருப்பதாலும், மேலும் கழிவுநீர் வெளியே செல்ல பாதை இல்லாததாலும் அந்த பகுதி முழுவதும்துர்நாற்றம் வீசுவதாகவும், கொசுக்கள் மூலம் நோய் பரவுவதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். விஜயராகவன்,35 என்பவர் கூறியதாவது: இடிக்கப்பட்ட வீடு கட்டுவதற்கும், ரோடுபோடுவதற்கும் அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் வீடுகள் மட்டும் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது,எந்த பகுதியிலும் ரோடு போட இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் கோயில் திருவிழாக்கள் மற்றும் முளைப்பாரி விழாவின் போது கூட சாமியை துாக்கி கொண்டு தெருக்களில்செல்லமுடியவில்லை. இது குறித்து மானா மதுரை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை கோரிக்கைவிடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்றார்.

மூலக்கதை