ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஹாங்காங்கை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

தினகரன்  தினகரன்
ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஹாங்காங்கை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

துபாய்: ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங் அணியை, 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்கியது. பின்னர் ஆடிய அந்த அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.

மூலக்கதை