இடைத்தரகரை நாடு கடத்த துபாய் உத்தரவு:ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில்திருப்பம்

தினமலர்  தினமலர்
இடைத்தரகரை நாடு கடத்த துபாய் உத்தரவு:ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில்திருப்பம்

புதுடில்லி: ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மிகைலை நாடு கடத்த துபாய் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அவர் இந்தியா கொண்டுவரப்பட உள்ளார்.

முந்தைய காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, பிரதமர் உட்பட, முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக, இத்தாலியை சேர்ந்த, 'பின்மெகானிகா ' நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லாண்டுடன் 12 அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்க 2010ல், ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்ததால், இந்த விவகாரம், இந்திய அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரித்துவருகிறது.

அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஹுலெட்டுக்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மிச்செல், 2008ல் எழுதிய ஒரு கடிதத்தில், ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தின் பின்னணியில், முக்கிய காரணியாக, 'சிக்னோரா காந்தி' செயல்பட்டதாக, குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே மிச்செல்லுக்கு எதிராக அமலாக்கத்துறை 2016-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில் துபாயில் பதுங்கியிருந்ததாக மிக்செல்லை நாடு கடத்த அந்நாட்டு கோர்ட் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இதையடுத்து மிக்செல் விரைவில் இந்தியா கொண்டு வரப்படலாம் எனவும் அப்போது ஊழலில் சிக்கியுள்ள காங். முக்கிய புள்ளிகள் யார் என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வரும்.

மூலக்கதை