இந்தியா-வங்கதேசம் பைப்லைன் பணிக்கு அடிக்கல்

தினகரன்  தினகரன்
இந்தியாவங்கதேசம் பைப்லைன் பணிக்கு அடிக்கல்

தாகா: மேற்கு வங்கத்திலிருந்து அசாம் வழியாக வங்கதேசத்திற்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்வதற்கான பைப்லைன் அமைக்க கடந்த ஏப்ரல் 9ம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ரூ.346 கோடியில் மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் இருந்து வங்கதேசத்தின் தினஜ்பூர் மாவட்டம், பரிபதிபூர் வரை 130 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படும் இத்திட்டப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் வீடியோ கான்பரன்சிங் மூலமாக கூட்டாக திட்டப்பணியை தொடங்கி வைத்தனர். மேலும், தாகா - டோங்கி - ஜாய்தேப்பூர் ரயில்வே திட்டத்தையும் அவர்கள் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பெட்ரோலியம், இயற்கை வாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பங்கேற்றனர். இந்த பைப்லைன் வழியாக வங்கதேசத்துக்கு ஆண்டுக்கு 10 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை