டிரம்ப் அறிவிப்பால் முற்றுகிறது வர்த்தகப்போர்: மேலும் பல சீன பொருட்களுக்கு வரி

தினமலர்  தினமலர்
டிரம்ப் அறிவிப்பால் முற்றுகிறது வர்த்தகப்போர்: மேலும் பல சீன பொருட்களுக்கு வரி

வாஷிங்டன், 200 பில்லியன் டாலர் மதிப்பிலான மேலும் பல சீன பொருட்கள் மீது 10 சதவீத வரி விதித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், 'இந்த ஆண்டு இறுதிக்குள் அது 25 சதவீதமாக அதிகரிக்கப்படும்' என கூறியுள்ளார். 'இதற்கு தக்க பதிலடி தரப்படும்' என சீனா தெரிவித்துள்ளதால் வர்த்தகப்போர் தீவிரமடைந்துள்ளது.சீனா- அமெரிக்கா இடையே ஆண்டிற்கு 710 பில்லியன் டாலர்கள் வர்த்தகம் நடக்கிறது. இதில் ஏற்றுமதி 187.5 பில்லியன் டாலர், இறக்குமதி 522.9 பில்லியன் டாலர்கள். வர்த்தக பற்றாக்குறை 335 பில்லியன் டாலர்கள். வர்த்தக பற்றாக்குறையை இந்த ஆண்டு இறுதிக்குள் 100 பில்லியனாக குறைக்கப்போவதாக அறிவித்து, பல்வேறு நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்து வருகிறார்.அதன்படி சீன இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரிவிதித்து உத்தரவிட்டார். அமெரிக்கா காப்புரிமை பெற்றுள்ள பல பொருட்களை சட்டவிரோதமாக சீனா தயாரித்து விற்பதாகவும் குற்றம்சாட்டினார்.வர்த்தகப்போர்பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு சீனாவும் வரியை அதிகரித்தது. இருதரப்பிற்கும் இடையே மோதல் முற்றி வந்த நிலையில் பேச்சு நடத்தப்பட்டது. சீன வர்த்தகத்துறை இணை அமைச்சர் வாங்ேஷாவன், வாஷிங்டன் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் தீர்வு கிடைக்கவில்லை.இந்நிலையில் மேலும் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன பொருட்களுக்கு 10 சதவீத வரிவிதித்து டிரம்ப் நேற்று அறிவித்தார். இந்த வரிவிதிப்பு செப்., 24 முதல் அமலுக்கு வரும் என்றும், சீனாவின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படாவிட்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் அது 25 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும்இதையடுத்து பீஜிங்கில் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஜெங் சுவாங் கூறியது: அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு உரிய எதிர் நடவடிக்கை இருக்கும். அது எத்தகையதாக இருக்கும் என்பதை தற்போது கூற முடியாது. சுதந்திரமாக வர்த்தகம் செய்ய சீனாவுக்கு முழு உரிமை உள்ளது.வாஷிங்டனின் இத்தகைய நடவடிக்கைகள் இரு தரப்புக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த வர்த்தக உலகையே பதட்டப்பட செய்கிறது. நாங்கள் திறந்த மனதுடனும், நேர்மையாகவும் பேச்சுக்கு தயாராக உள்ளோம். ஆனால் அமெரிக்காவிடம் அது எதுவுமே இல்லை. தமது எண்ணத்தை எங்கள் மீது திணிக்க முயற்சிக்கிறது. அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடைத்தபின் எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். அது இறக்குமதி மீதான வரிவிதிப்பிற்கும் அப்பாற்பட்டதாக இருக்கும், என்றார்.வரி விதிப்பு பிரச்னை தொடர்பாக உயர்மட்ட பேச்சு நடத்த சீன அதிபரின் முதன்மை செயலர் லியூஹி, அடுத்த வாரம் வாஷிங்டன் செல்லவிருந்தார். நேற்று டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பையடுத்து அந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் சீன இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மூலக்கதை