கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் சிக்கிய ஜலந்தர் பிஷப் பிராங்கோ திடீர் தலைமறைவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் சிக்கிய ஜலந்தர் பிஷப் பிராங்கோ திடீர் தலைமறைவு

திருவனந்தபுரம்: கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் சிக்கிய ஜலந்தர் பிஷப் நாளை விசாரணைக்கு ஆஜராக அழைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று அவர் திடீரென மாயமாகி இருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் குரவிலங்காட்டை சேர்ந்த கன்னியாஸ்திரியை ஜலந்தர் பிஷப் பிராங்கோ மீதான பலாத்காரம் புகார் விவகாரத்தில் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்து வருகிறது. அவரை உடனே கைது செய்ய கோரி போராட்டங்கள் வெடித்துள்ளது.

கொச்சியில் இன்று 11ம் நாளாக குரவிலங்காடு மடத்தை சேர்ந்த கன்னியாஸ்திரிகள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதே போல் புகார் அளித்த கன்னியாஸ்திரியின் சகோதரி 2வது நாளாக இன்றும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

பிரபல மலையாள எழுத்தாளர் கீதாவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே நாளை (19ம் தேதி) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று பிஷப் பிராங்கோவுக்கு தனிப்படை போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

விசாரணைக்கு வர தயாராக இருப்பதாக பிஷப் பிராங்கோவும் போலீசிடம் தெரிவித்திருந்தார். இதையடுத்து பிஷப் பிராங்கோ வாடிகனில் உள்ள போப்பாண்டவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

வழக்கு விசாரணை தொடர்பாக போலீசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க இருப்பதால் தனக்கு பிஷப் பதவியில் இருந்து தற்காலிகமாக விலக்கு அளிக்க வேண்டும் என கோரியுள்ளார். இதுகுறித்து போப்பாண்டவர் இன்று அல்லது நாளை தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிஷப் பிராங்கோவை திடீரென நேற்று முதல் காணவில்லை.

அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்- என்பது ெதரியவில்லை என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வரை அவர் ஜலந்தர் பிஷப் இல்லத்தில் இருந்தார்.

அவர் கேரளா சென்றுள்ளாரா? அல்லது வேறு எங்காவது ெசன்றுவிட்டாரா? என பிஷப் இல்லத்தை சேர்ந்தவர்கள் தகவல் அளிக்க மறுத்துவிட்டனர். நாளை அவர் விசாரணைக்கு ஆஜரானால் ேகாட்டயம் எஸ்பி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடக்கும் என தெரிகிறது. எஸ்பி ஹரிசங்கர் தலைமையில் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிஷப்புக்கு எதிராக முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதால் அவரை கைது செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதை தவிர்க்க அவர் முன்ஜாமீன் கோர முடிவு செய்துள்ளார்.

இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் பிஷப் சார்பில் ஜாமீன் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு மீதான விசாரணை இன்று மாலை நடக்கவுள்ளது.

.

மூலக்கதை