தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ரவிசாஸ்திரி லாயக்கு இல்லை: முன்னாள் வீரர் அதிரடி தாக்குதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ரவிசாஸ்திரி லாயக்கு இல்லை: முன்னாள் வீரர் அதிரடி தாக்குதல்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி பயிற்சியாளர் பதவிக்கு தகுதி இல்லாதவர் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேட்டன் சவுகான் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட்டில் இந்திய அணி 1-4 என்ற கணக்கில் தொடரை மோசமாக   இழந்தது.

டெஸ்ட் தொடரின் தொடக்கம் முதலே இந்திய அணி சொதப்பலாக விளையாடியது. பேட்டிங்கில் பெரும்பாலும் கேப்டன் விராட் கோலியை தவிர்த்து மற்ற வீரர்கள் சரியாக விளையாடவில்லை.

சில நேரங்களில் இங்கிலாந்து அணியின் பார்ட்னர்ஷிப்பை முறியடிக்க முடியாமல் பந்துவீச்சாளர்களும் திணறினர். இந்திய அணி படுதோல்வி அடைந்ததோடு, சில போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தும் தோல்வி அடைந்தது.

பேட்ஸ்மேன்களின் விக்கெட் சரிவே அதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

இங்கிலாந்து தொடரில் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. ரசிகர்கள் தொடங்கி முன்னாள் வீரர்கள் வரை பலரும் விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சேட்டன் சவுகான் ரவிசாஸ்திரியை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்திற்கு முன்பாக ரவிசாஸ்திரியை தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.   ரவிசாஸ்திரி சிறந்த வர்ணனையாளர்.

அவரை கமெண்ட்ரி செய்ய அனுமதிக்க வேண்டும். இந்திய அணி இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும்.

இரு அணிகளும் சிறப்பாக விளையாடினாலும், முடிவு இங்கிலாந்து அணி பக்கமே இருந்துள்ளது. அதனால், ஆட்டத்தை முடிக்கும் திறன் குறித்து ஆய்வதில் தோற்றுவிட்டோம்.
தற்போதைய இந்திய அணிதான் சிறந்த வெளிநாட்டு பயணங்களுக்கான அணி என்று ரவிசாஸ்திரி சொன்னதை நான் ஏற்கவில்லை.

1980களில் இருந்த அணிதான் சிறந்த அணி” என்றார்.

.

மூலக்கதை