நாளை நடைபெறும் போட்டியில் இந்தியாவை வீழ்த்த திட்டம் தயார்: பாகிஸ்தான் கேப்டன் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாளை நடைபெறும் போட்டியில் இந்தியாவை வீழ்த்த திட்டம் தயார்: பாகிஸ்தான் கேப்டன் பேட்டி

துபாய்: தற்போது துபாயில் 14-வது ஆசியக் கோப்பைப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி நாளை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியை வீழ்த்த   தேவையான அனைத்து திட்டங்களும் தயாராக உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்பராஸ் அஹமது தெரிவித்துள்ளார். இது குறித்து நிருபர்களிடம் அஹமது கூறியதாவது: ஒரு கேப்டனாக ஹாங்காங் அணி உடனான போட்டியில், பல விஷயங்களை கவனித்தேன்.

9 அல்லது 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். புதிய பந்துகளில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது.

பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் ஆகிய 3 பிரிவுகளிலும் அதிகபட்ச திறமையை வெளிக்காட்ட வீரர்கள் துடிப்பாக உள்ளனர்.

எப்படியும்  இந்த முறை இந்தியாவை வென்று விட திட்டமிட்டுள்ளோம், இவ்வாறு கூறினார். ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த  1984-ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை நடந்த 13 போட்டிகளில் இந்திய அணி 6 முறையும், இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - பாகிஸ்தான் மோதும் இந்த போட்டிக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் காத்து இருக்கிறார்கள்.

நாளைய போட்டியினை  காண டிக்கெட் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே விற்றுத் தீர்ந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை