பாக்.கிலும் 143 சதவீதம் சமையல் காஸ் விலை உயர்வு

தினமலர்  தினமலர்
பாக்.கிலும் 143 சதவீதம் சமையல் காஸ் விலை உயர்வு


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானிலும் சமையல் காஸ் விலையை புதிய பிரதமர் இம்ரான்கான் அரசு 143 சதவீதம் அளவிற்கு உயர்த்தி உள்ளது.
பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி வெற்றி பெற்றது. அந்த கட்சி தலைவரும், முன்னாள் கிரிக்கெட்வீரருமான, இம்ரான் கான், பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் மக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும் சமையல் காஸ்விலையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் குலாம்சர்வர்கான் கூறியிருப்பதாவது:
திங்கட்கிழமை கூடிய பொருளாதார ஒருங்கிணைப்பு குழு எடுத்த முடிவின் படி விலை உயர்வு அதகரிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோகிப்பாளர்களுக்கு 10 சதவீதம் முதல் 143 சதவீதம் வரையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வர்த்தக பிரிவு சிலிண்டர்களுக்கும் 30 சதவீதம் முதல் 57 சதவீதம் விரையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் எரிவாயு நிறுவனங்கள் பற்றாக்குறையில் இயங்கி வருவதாகவும், தற்போதுள்ள விலை முறையை தொடர முடியாது எனவும் அமைச்சர் கூறினார்.

விலை உயர்வை கண்டித்துள்ள பாகிஸ்தான் முஸ்லிக் லீக் நவாஸ் தலைவர் அஹ்ஸன் இக்பால் கூறுகையில் அரசாங்கம் அதன் கொள்கைகளுக்கு எதிராக எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறது. 20 நாட்களில் இந்த அரசாங்கத்தை பற்றி இருபது நகைச்சுவைகள் பிரபலமாகி விட்டன என கூறி உள்ளார்.

முன்னதாக பாக்., அரசின் கடன் சுமை 30 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. கடன் சுமையை குறைக்க, ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதுடன் சிக்கன நடவடிக்கையாக தேவைக்கு அதிகமாக உள்ள சொகுசு வாகனங்களை ஏலம் விட பிரதமர் முடிவு செய்தார். இதன்படி நடைபெற்ற ஏலத்தில் அதிக விலைக்கு விற்பனையான கார்கள் அனைத்தும் உள்நாட்டில் தயாரிக்கப் பட்டவை. அடுத்த முறை குண்டு துளைக்காத கார்கள், வெளிநாட்டு சொகுசு கார்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஏலம் விடப்படும் என கூறப்பட்டது.

மூலக்கதை