இந்தியாவில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு குறைந்துள்ளதாக ஐ.நா. சபையின் அறிக்கையில் தகவல்

தினகரன்  தினகரன்
இந்தியாவில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு குறைந்துள்ளதாக ஐ.நா. சபையின் அறிக்கையில் தகவல்

நியூயார்க் : இந்தியாவில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு கடந்த ஆண்டில் குறைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கூறியுள்ளது. கடந்த ஆண்டில் 8 லட்சத்து 2 ஆயிரம் பச்சிளம் குழந்தைகள் இறந்ததாகவும் இது முந்தைய ஆண்டை விட 65000 குறைவு என்றும் ஐநா அமைப்பின் குழந்தை இறப்பு மதிப்பீட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மருத்துவமனைகளில் பிரசவங்கள் நடப்பது அதிகரித்துள்ளது எனவும் நவீன மருத்துவ வசதிகள் அதிகரித்துள்ளதும் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைய முக்கிய  காரணம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மேலும் 2016ம் ஆண்டு இந்தியாவில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் 1000 குழந்தைகளுக்கு 44 என்று இருந்ததாகவும் ஆனால் 2017ம் ஆண்டில் இது 39 ஆக குறைந்து விட்டதாகவும் ஐநாவின் குழந்தை இறப்பு மதிப்பீட்டு பிரிவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பிறந்த உடன் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 6 லட்சத்து 5 ஆயிரமாகவும் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு ஒரு லட்சத்து ஆயிரமாகவும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்ப்பட்ட  குழந்தைகள் இறப்புக்கு பெரும்பாலும் வயிற்று போக்கு, நிமோனியா, பிரசவ கால பிரச்சனைகள் ஆகியவையே காரணமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை