காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் நீதிபதிகள் ஆய்வு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

 

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 4 நீதிபதிகள் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர். முக்தி தரும் நகரங்கள் ஏழில் ஒன்றான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சுகாதார ஏற்பாடுகள் குறித்து மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தலீலா (செங்கல்பட்டு), காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி கருணாநிதி, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மீனாட்சி, மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆனந்த் முரளிகிருஷ்ணா ஆகியோர்  ஆய்வு செய்தனர்.   பக்தர்களுக்கு குடிநீர் முறையாக வழங்கப்படுகிறதா, பக்தர்களுக்கான கழிப்பறை சரியாக உள்ளதா, சிசிடிவி கேமராக்கள் இயங்குகிறதா, பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.  அர்ச்சனைக் கட்டணம் குறிப்பிட்டுள்ள அளவுக்கு அதிகமாக வசூலிக்கப்படுகிறதா, வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் தெரிந்துகொள்வதற்கு ஏற்ற வகையில் பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளனவா என்றும் ஆய்வு நடத்தினர்.  உண்டியல் வருமானம் எவ்வாறு கணக்கெடுக்கப்படுகிறது, காணிக்கைகள் முறையாக வரவு வைக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தனர்.  அதுமட்டுமின்றி கோயிலுக்கு வந்த பக்தர்களிடமும் நேரடியாக குறைகளைக் கேட்டறிந்தனர்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 4 நீதிபதிகள் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர்.

முக்தி தரும் நகரங்கள் ஏழில் ஒன்றான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சுகாதார ஏற்பாடுகள் குறித்து மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தலீலா (செங்கல்பட்டு), காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி கருணாநிதி, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மீனாட்சி, மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆனந்த் முரளிகிருஷ்ணா ஆகியோர்  ஆய்வு செய்தனர்.

 பக்தர்களுக்கு குடிநீர் முறையாக வழங்கப்படுகிறதா, பக்தர்களுக்கான கழிப்பறை சரியாக உள்ளதா, சிசிடிவி கேமராக்கள் இயங்குகிறதா, பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

அர்ச்சனைக் கட்டணம் குறிப்பிட்டுள்ள அளவுக்கு அதிகமாக வசூலிக்கப்படுகிறதா, வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் தெரிந்துகொள்வதற்கு ஏற்ற வகையில் பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளனவா என்றும் ஆய்வு நடத்தினர்.

 உண்டியல் வருமானம் எவ்வாறு கணக்கெடுக்கப்படுகிறது, காணிக்கைகள் முறையாக வரவு வைக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தனர்.  அதுமட்டுமின்றி கோயிலுக்கு வந்த பக்தர்களிடமும் நேரடியாக குறைகளைக் கேட்டறிந்தனர்.

 

மூலக்கதை