தமிழக மின்வெட்டு தீர நிலக்கரி ஒதுக்கீடு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
தமிழக மின்வெட்டு தீர நிலக்கரி ஒதுக்கீடு!

 

தமிழகத்தில் மின்வெட்டு நீடிப்பதால் மக்கள் அவதியுற்று வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டதில், மத்திய அரசு பாதியளவு நிலக்கரி சப்ளையை தொடங்கியுள்ளது.  இதற்கிடையே, தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு, வெளிநாடுகளில் இருந்து 6 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய தமிழக அரசு டெண்டர் விடுத்துள்ளது. தமிழகத்தில், அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டதால், ஒவ்வொரு அனல் மின்நிலையங்களும் மூடப்பட்டு வருகின்றன.  நிலக்கரி பற்றாக்குறையை போக்கிட, மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். இதையடுத்து மத்திய மின்துறை மற்றும் சுரங்கத்துறை அமைச்சக உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி,  நிலக்கரி சப்ளைக்கு அனுமதி அளித்துள்ளனர்.  தமிழக அரசு, தினமும் 72,000 டன் நிலக்கரி சப்ளை செய்யக் கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து, 10 ரேக்குகளில் (ஒரு ரேக் என்பது 3,750 டன் நிலக்கரி) நிலக்கரி சப்ளை துவங்கியுள்ளது.  அடுத்த சில நாட்களில், 13 ரேக்குகளில் நிலக்கரி சப்ளைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் மின்வெட்டு நீடிப்பதால் மக்கள் அவதியுற்று வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டதில், மத்திய அரசு பாதியளவு நிலக்கரி சப்ளையை தொடங்கியுள்ளது.

இதற்கிடையே, தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு, வெளிநாடுகளில் இருந்து 6 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய தமிழக அரசு டெண்டர் விடுத்துள்ளது. தமிழகத்தில், அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டதால், ஒவ்வொரு அனல் மின்நிலையங்களும் மூடப்பட்டு வருகின்றன.

 நிலக்கரி பற்றாக்குறையை போக்கிட, மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். இதையடுத்து மத்திய மின்துறை மற்றும் சுரங்கத்துறை அமைச்சக உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி,  நிலக்கரி சப்ளைக்கு அனுமதி அளித்துள்ளனர். 

தமிழக அரசு, தினமும் 72,000 டன் நிலக்கரி சப்ளை செய்யக் கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து, 10 ரேக்குகளில் (ஒரு ரேக் என்பது 3,750 டன் நிலக்கரி) நிலக்கரி சப்ளை துவங்கியுள்ளது. 

அடுத்த சில நாட்களில், 13 ரேக்குகளில் நிலக்கரி சப்ளைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

மூலக்கதை