தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை, 2 சதவீதம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தற்போதுள்ள அகவிலைப்படி 7 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்த்தி வழங்க உயர்த்தி வழங்கவும், ஜூலை 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அகவிலைப்படி உயர்வு மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் என 18 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆண்டுக்கு சுமார் 1,157 கோடி ரூபாய் கூடுதல் செலவு அரசுக்கு ஏற்படும் என்றும் 2 சதவிதம் அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களுக்கு ரூ.314 முதல் ரூ.4500 வரையிலும் ஊதிய உயர்வு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை