வானிலை அறிக்கை கணக்கெடுக்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரை இல்லாத அளவு - சாதனை படைத்த இவ்வருட வெப்பம்! -

PARIS TAMIL  PARIS TAMIL
வானிலை அறிக்கை கணக்கெடுக்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரை இல்லாத அளவு  சாதனை படைத்த இவ்வருட வெப்பம்!

2018 ஆம் ஆண்டு கோடை வெப்பம் வரலாற்றில் பதிவாகியுள்ளது. வானினை அறிக்கையினை பதிவு செய்யத்தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை காணாத சாதனையை இவ்வருடம் கண்டுள்ளது. 
 
நேற்று திங்கட்கிழமை செப்டம்பர் 17 ஆம் திகதி, இவ்வருடத்தில் 88 வது தடவையாக 25°c வெப்பத்துக்கு மேல் பதிவானது. ஒரு வருடத்தில் 88 நாட்களுக்கு 25°c க்கு மேல் நிலவுவது வரலாற்றிலேயே இது தான் முதல்தடவை. முன்னதாக 1947 ஆம் ஆண்டு 87 தடவைகள் 25°c வெப்பத்துக்கு மேல் நிலவியிருந்ததே அதிகூடிய சாதனையாக இருந்தது. அந்த எண்ணிக்கையையும் இவ்வருடம் முறியடிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 2003 ஆம் ஆண்டில் 82 தடவைகள் இந்த வெப்பம் பதிவானது. 
 
பரிசில் சராசரியாக 49 நாட்கள் மாத்திரமே 25°c க்கு மேல் நிலவும்.  இத்தனை நாட்கள் நீடிப்பது இதுவே முதன்முறை. தவிர இந்த வெப்பம் இன்று உட்பட மேலும் சில நாட்களுக்கு பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருட கோடை காலத்தின் போது பரிசுக்குள் 40°c வரை அதிகபட்சமாக வெப்பம் நிலவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை