அதிகாரத்தை விரும்பியது இல்லை, நாட்டு நலனே எங்களுக்கு முக்கியம்: ஆர்.எஸ்.எஸ் தலைவர்

PARIS TAMIL  PARIS TAMIL
அதிகாரத்தை விரும்பியது இல்லை, நாட்டு நலனே எங்களுக்கு முக்கியம்: ஆர்.எஸ்.எஸ் தலைவர்

ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் சுமார் 80 நிமிடங்களுக்கு மேல் உரையாற்றிய மோகன் பாகவத் பேசியதாவது:-

ஆர்எஸ்எஸ் அமைப்பு அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று நாங்கள் எப்போதும் விரும்பியது இல்லை. நாடு நலம் பெற வேண்டும் என்பதுதான் எங்கள் பிரதான கொள்கை. எங்கள் அமைப்பு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. ஆர்எஸ்எஸ் ஒரு முழுமையான ஜனநாயக அமைப்பு. இங்கு தனிநபர்களின் அதிகாரத்துக்கு இடமில்லை. எங்கள் கொள்கைகளை யாரிடமும் திணிப்பதும் இல்லை. பிற அமைப்புகளை வெளியில் இருந்து இயக்குவதும் இல்லை

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு உரிய மதிப்பளிக்கப்பட வேண்டியது மட்டுமின்றி, அதனை நாம் கொண்டாடவும் வேண்டும். சமூகத்தில் பிரச்னையை ஏற்படுத்த நமது பன்முகத்தன்மை ஒரு காரணமாக இருக்கக் கூடாது. ஒருங்கிணைந்த மற்றும் ஒற்றுமையான இந்தியா என்பதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய நோக்கமாக உள்ளது. ஹிந்துத்துவம் எங்களை ஒருங்கிணைக்கிறது. நாங்கள் பின்பற்றும் ஹிந்துத்துவம் என்பது யாருக்கும் எதிரானதோ, யாரையும் தாழ்த்த வேண்டும் என்பதற்கானதோ அல்ல.

இங்கு ஒவ்வொரு தொண்டரும் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வாய்ப்பு உண்டு. மக்கள் மத்தியில் ஆர்எஸ்எஸ் குறித்து சில தவறான புரிதல்கள் உள்ளன. இங்கு ஒருவர்தான் அனைத்து அதிகாரத்தையும் கொண்டுள்ளார் என்பது அதில் முக்கியமானதாக உள்ளது. ஆனால், மிகவும் வெளிப்படையான அமைப்பு என்றால் அது ஆர்எஸ்எஸ் மட்டும்தான். இங்கு தொண்டர்களுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. அமைப்பு தங்களுக்கு அளிக்கும் மதிப்பின் அடிப்படையில் தொண்டர்கள் இங்கு நடந்து கொள்கிறார்கள். காங்கிரஸ் கட்சி சுதந்திரப் போராட்ட காலத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளது. இந்தியாவுக்கு பல சிறந்த தலைவர்களை அளித்துள்ளது”இவ்வாறு அவர் பேசினார்

மூலக்கதை